×

آل عمران

வசனம் 153

அல்-முக்தஸர்

إِذْ تُصْعِدُونَ وَلَا تَلْوُۥنَ عَلَىٰٓ أَحَدٍ وَٱلرَّسُولُ يَدْعُوكُمْ فِىٓ أُخْرَىٰكُمْ فَأَثَـٰبَكُمْ غَمًّۢا بِغَمٍّ لِّكَيْلَا تَحْزَنُوا۟ عَلَىٰ مَا فَاتَكُمْ وَلَا مَآ أَصَـٰبَكُمْ ۗ وَٱللَّهُ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ ﴿١٥٣﴾

நம்பிக்கையாளர்களே! உஹதுப் போரில் தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு நீங்கள் அடைந்த தோல்வியால் ஒருவரையொருவர் திரும்பிக்கூட பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்தீர்கள். உங்களுக்குப் பின்னாலிருந்து, இணைவைப்பாளர்களுக்கு முன்னாலிருந்து, “அல்லாஹ்வின் அடியார்களே, என்னிடம் வாருங்கள், அல்லாஹ்வின் அடியார்களே என்னிடம் வாருங்கள்” என்று தூதர் உங்களை அழைத்துக் கொண்டிருந்தார். இந்த துன்பத்திற்கும் நெருக்கடிக்கும் மேலும் அல்லாஹ் துன்பத்தையும் நெருக்கடியையும் தொடரச் செய்தான். முதலில் இறைஉதவியையும் போர்ச் செல்வங்களையும் இழந்தீர்கள். பின்னர் நபி கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தி உங்களிடையே பரவியது. இந்த துன்பம் ஏனெனில் தூதர் கொல்லப்படவில்லை என்பதை அறிந்தபிறகு இழந்த வெற்றிக்காகவும் போர்ச் செல்வங்களுக்காகவும் உங்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்காகவும் உயிர்ச் சேதங்களுக்காகவும் கவலை கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான். தூதர் கொல்லப்படவில்லை என்ற செய்தியை அறிந்தபிறகு எல்லா துன்பங்களும் உங்களுக்கு இலகுவாகிவிட்டன. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். உங்களின் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களோ செய்யும் உறுப்புக்களால் செய்யும் செயல்களோ எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.