×

آل عمران

வசனம் 147

அல்-முக்தஸர்

وَمَا كَانَ قَوْلَهُمْ إِلَّآ أَن قَالُوا۟ رَبَّنَا ٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِىٓ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَٱنصُرْنَا عَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ ﴿١٤٧﴾

இந்தப் பொறுமையாளர்கள் துன்பங்களால் பாதிக்கப்பட்டபோது, “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்களின் விஷயத்தில் நாங்கள் வரம்புமீறியதையும் மன்னித்துவிடுவாயாக. எதிரிகளை சந்திக்கும்போது எங்களை உறுதிப்படுத்துவாயாக. உன்னை நிராகரித்த மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவிபுரிவாயாக என்ற பிரார்த்தனையைத் தவிர வேறு எதனையும் கூறவில்லை.