×

آل عمران

வசனம் 120

அல்-முக்தஸர்

إِن تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَإِن تُصِبْكُمْ سَيِّئَةٌ يَفْرَحُوا۟ بِهَا ۖ وَإِن تَصْبِرُوا۟ وَتَتَّقُوا۟ لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْـًٔا ۗ إِنَّ ٱللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ ﴿١٢٠﴾

நம்பிக்கையாளர்களே! எதிரிகளுக்கு எதிரான வெற்றி, செல்வ வளம், குழந்தைகள் என்று ஏதேனும் அருட்கொடைகளை அவர்கள் உங்களிடம் கண்டால் கவலையடைந்து விடுகிறார்கள். எதிரிகளின் ஆதிக்கம், செல்வங்களிலும் குழந்தைகளிலும் ஏற்படும் இழப்பு போன்ற துன்பங்கள் உங்களுக்கு ஏற்படுவதைக் கண்டால் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவனுடைய விதியை பொறுமையை ஏற்றுக்கொண்டு அவனுடைய கோபத்திலிருந்து தவிர்ந்திருந்தால் அவர்களின் சூழ்ச்சியும் நோவினையும் உங்களுக்கு எந்தத் தீங்கும் அளிக்காது. அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளை அல்லாஹ் சூழ்ந்துள்ளான். அவன் அவர்களை தோல்வியடைந்தோராக திருப்பிவிடுவான்.