அல்-முக்தஸர்
وَمَا يَفْعَلُوا۟ مِنْ خَيْرٍ فَلَن يُكْفَرُوهُ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلْمُتَّقِينَ ﴿١١٥﴾
இவர்கள் குறைவாகவோ அதிகமாகவோ செய்யும் எந்த நற்காரியத்தின் கூலியும் ஒருபோதும் வீணாகிவிடவோ குறைந்துவிடவோ மாட்டாது. தன் கட்டளைகளைச் செயல்படுத்தி, தான் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி தன்னை அஞ்சக்கூடியவர்களை அல்லாஹ் நன்கறிந்தவன். அவர்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்கு கூலி வழங்குவான்.