×

آل عمران

வசனம் 110

அல்-முக்தஸர்

كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ ٱلْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِٱللَّهِ ۗ وَلَوْ ءَامَنَ أَهْلُ ٱلْكِتَـٰبِ لَكَانَ خَيْرًا لَّهُم ۚ مِّنْهُمُ ٱلْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ ٱلْفَـٰسِقُونَ ﴿١١٠﴾

முஹம்மதுடைய சமூகமே! மக்களுக்காக அல்லாஹ் தோற்றுவித்த சமூகங்களிலே ஈமான் மற்றும் செயல்களின் அடிப்படையில் நீங்கள்தாம் சிறந்த சமூகமாகவும் அவர்களுக்கு அதிகம் பயனளிக்கக்கூடிய சமூகமாகவும் இருக்கின்றீர்கள். மார்க்கம் காட்டிய அறிவுக்குப் பொருந்தும் நன்மையான செயல்களைச் செய்யுமாறு அவர்களைத் தூண்டுகிறீர்கள்; மார்க்கம் தடுத்த அறிவு ஏற்காத தீய செயல்களைவிட்டும் அவர்களைத் தடுக்கிறீர்கள்; அல்லாஹ்வின்மீது உறுதியான நம்பிக்கை கொண்டு அந்த நம்பிக்கையை உங்களின் செயல்களால் உண்மைப்படுத்துகிறீர்கள். வேதம் வழங்கப்பட்ட யூதர்களும் கிருஸ்தவர்களும் முஹம்மதின்மீது நம்பிக்கைகொண்டால் அது இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவர்களுக்குச் சிறந்ததாக அமைந்திருக்கும். அவர்களில் குறைவானவர்களே முஹம்மது கொண்டுவந்தவற்றை உண்மைப்படுத்துகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு வெளியேறியவர்களாவர்.