×

العنكبوت

வசனம் 67

அல்-முக்தஸர்

أَوَلَمْ يَرَوْا۟ أَنَّا جَعَلْنَا حَرَمًا ءَامِنًا وَيُتَخَطَّفُ ٱلنَّاسُ مِنْ حَوْلِهِمْ ۚ أَفَبِٱلْبَـٰطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَةِ ٱللَّهِ يَكْفُرُونَ ﴿٦٧﴾

கடலில் மூழ்கிவிடாமல் அவர்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வின் அருட்கொடையை மறுப்பவர்கள் நாம் அவர்களுக்கு வழங்கிய மற்றொரு அருட்கொடையை நினைத்துப் பார்க்க வேண்டாமா? அது நாம் அவர்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பான பூமியை அளித்துள்ளோம், அவர்கள் அல்லாதவர்கள் மீது போர் தொடுக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அவர்களது பெண்கள், பிள்ளைகள் ஆகியோர் சிறைபிடிக்கப்படுகின்றனர். சொத்துக்கள் கொள்ளையிடப்படுகின்றன. போலியாக எண்ணிய அசத்திய தெய்வங்களின் மீது நம்பிக்கைகொண்டு, அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தாமல் நிராகரிக்கிறார்களா?