அல்-முக்தஸர்
وَقَالَ إِنَّمَا ٱتَّخَذْتُم مِّن دُونِ ٱللَّهِ أَوْثَـٰنًا مَّوَدَّةَ بَيْنِكُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ ثُمَّ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ يَكْفُرُ بَعْضُكُم بِبَعْضٍ وَيَلْعَنُ بَعْضُكُم بَعْضًا وَمَأْوَىٰكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن نَّـٰصِرِينَ ﴿٢٥﴾
இப்ராஹீம் தம் சமூகத்தாரிடம் கூறினார்: “நீங்கள் சிலைகளை வணங்கும் தெய்வங்களாக எடுத்திருப்பது, உலக வாழ்வில் அவற்றை வணங்குவதில் உள்ள பற்று மற்றும் பழக்கத்தினால்தான். பின்னர் மறுமை நாளில் உங்களிடையேயுள்ள பற்று அறுபட்டுப்போகும். வேதனையைக் காணும்போது உங்களில் ஒருவர் மற்றவரை விட்டும் விலகிவிடுவார். ஒருவரையொருவர் சபிப்பார்கள். உங்களின் இருப்பிடம் நரகமாகும். அல்லாஹ்வின் வேதனையிலிருந்து உங்களைப் தடுக்கக்கூடிய உதவியாளர்கள் யாரும் உங்களுக்கு இருக்க மாட்டார்கள். நீங்கள் வணங்கிய சிலைகளாலோ, மற்றவர்களாலோ உங்களுக்கு உதவ முடியாது.