×

القصص

வசனம் 83

அல்-முக்தஸர்

تِلْكَ ٱلدَّارُ ٱلْـَٔاخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّا فِى ٱلْأَرْضِ وَلَا فَسَادًا ۚ وَٱلْعَـٰقِبَةُ لِلْمُتَّقِينَ ﴿٨٣﴾

நாம் நிலையான அந்த மறுமையின் வீட்டை பூமியில் சத்தியத்தை நம்பிக்கை கொள்வதை விட்டும் அதனை பின்பற்றுவதை விட்டும் கர்வம் கொள்ளவோ, அதில் குழப்பம் செய்யவோ விரும்பாதவர்களுக்கு இன்பமும் கண்ணியமும் உள்ள வீடாக ஆக்கியுள்ளோம். அருட்கொடைகள் நிறைந்த சுவனமும், அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அங்கு கிடைக்கும் அல்லாஹ்வின் திருப்தியுமே புகழத்தக்க முடிவாகும்.