×

القصص

வசனம் 75

அல்-முக்தஸர்

وَنَزَعْنَا مِن كُلِّ أُمَّةٍ شَهِيدًا فَقُلْنَا هَاتُوا۟ بُرْهَـٰنَكُمْ فَعَلِمُوٓا۟ أَنَّ ٱلْحَقَّ لِلَّهِ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ ﴿٧٥﴾

நாம் ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் அவர்களின் பொய்ப்பித்தலுக்கு, நிராகரிப்பிற்கு எதிராக சாட்சி கூறுவதற்காக அதன் நபியை கொண்டு வருவோம். அப்போது அந்த சமூகங்களில் பொய்ப்பிப்பவர்களிடம் கூறுவோம்: “உங்களின் பொய், நிராகரிப்பிற்கு ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள். அவர்களின் ஆதாரங்கள் அனைத்தும் பயனற்றுப்போகும். சந்தேகமற்ற சத்தியம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நிச்சயமாக அவர்கள் புரிந்துகொள்வார்கள். அவர்கள் அவனுக்கு பொய்யாகச் சித்தரித்துக்கொண்டிருந்த இணைத்தெய்வங்களெல்லாம் அவர்களைவிட்டு மறைந்துவிடும்.