அல்-முக்தஸர்
وَجَآءَ رَجُلٌ مِّنْ أَقْصَا ٱلْمَدِينَةِ يَسْعَىٰ قَالَ يَـٰمُوسَىٰٓ إِنَّ ٱلْمَلَأَ يَأْتَمِرُونَ بِكَ لِيَقْتُلُوكَ فَٱخْرُجْ إِنِّى لَكَ مِنَ ٱلنَّـٰصِحِينَ ﴿٢٠﴾
தகவல் பரவியதும் மூஸா மீது கொண்ட அன்பினால் அவர் பிடிபட்டுவிடுவார் என்பதால் நகரத்தின் கடைக்கோடியிலிருந்து ஒருவர் ஓடோடி வந்து அவரிடம் கூறினார்: “மூஸாவே! நிச்சயமாக ஃபிர்அவ்னின் சமூகத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிகுந்தவர்கள் உம்மைக் கொல்வதற்கு ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே நீர் ஊரிலிருந்து வெளியேறி விடுவீராக. அவர்கள் உம்மைப் பிடித்துக் கொன்றுவிடக்கூடாது என்பதால் நிச்சயமாக நான் உமக்கு அறிவுரை வழங்குபவராக இருக்கிறேன்.”