அல்-முக்தஸர்
ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۚ ٱلرَّحْمَـٰنُ فَسْـَٔلْ بِهِۦ خَبِيرًا ﴿٥٩﴾
அவனே வானங்களையும் பூமியையும் அவையிரண்டிற்கு இடையிலுள்ளதையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் தன் கண்ணியத்திற்கேற்ப அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான். அவன் அளவிலாக் கருணையாளன்.-தூதரே!- நன்கு அறிந்தவனிடம் அதனைக் கேட்பீராக. அவன்தான் ஒவ்வொரு பொருளையும் அறிந்த அல்லாஹ். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.