அல்-முக்தஸர்
وَلَوْ شِئْنَا لَبَعَثْنَا فِى كُلِّ قَرْيَةٍ نَّذِيرًا ﴿٥١﴾
நாம் நாடியிருந்தால் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தூதரை அல்லாஹ்வின் வேதனையிலிருந்து எச்சரிக்கை செய்யக்கூடியவராக அனுப்பியிருப்போம். ஆயினும் நாம் அதனை நாடவில்லை. நிச்சயமாக நாம் முஹம்மதை மனிதர்கள் அனைவருக்குமே தூதராக அனுப்பியுள்ளோம்.