×

الفرقان

வசனம் 40

அல்-முக்தஸர்

وَلَقَدْ أَتَوْا۟ عَلَى ٱلْقَرْيَةِ ٱلَّتِىٓ أُمْطِرَتْ مَطَرَ ٱلسَّوْءِ ۚ أَفَلَمْ يَكُونُوا۟ يَرَوْنَهَا ۚ بَلْ كَانُوا۟ لَا يَرْجُونَ نُشُورًا ﴿٤٠﴾

உம் சமூகத்தைச் சேர்ந்த நிராகரிப்பாளர்கள் -ஷாம் தேசத்தை நோக்கிச் செல்லும்- போது ஓரினச் சேர்க்கைக்கு தண்டனையாக அவர்கள் படிப்பினை பெறும்பொருட்டு கல்மழை பொழிவிக்கப்பட்டு அழிக்கப்பட்ட லூத்தின் சமூகம் வாழ்ந்த ஊரைக் கடந்து செல்கிறார்கள். அவர்கள் அந்த ஊரைப் பார்க்காமல் குருடாகிவிட்டார்களா என்ன? இல்லை, மாறாக அவர்கள் விசாரணை செய்யப்படுவதற்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை எதிர்பார்க்காதவர்களாக உள்ளார்கள்.