×

الفرقان

வசனம் 20

அல்-முக்தஸர்

وَمَآ أَرْسَلْنَا قَبْلَكَ مِنَ ٱلْمُرْسَلِينَ إِلَّآ إِنَّهُمْ لَيَأْكُلُونَ ٱلطَّعَامَ وَيَمْشُونَ فِى ٱلْأَسْوَاقِ ۗ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً أَتَصْبِرُونَ ۗ وَكَانَ رَبُّكَ بَصِيرًا ﴿٢٠﴾

தூதரே!- உமக்கு முன்னர் நாம் மனிதர்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்கள் உணவு உண்ணக்கூடியவர்களாகவும் கடைவீதிகளில் உலாவக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். நீர் தூதர்களில் புதுமையானவர் அல்ல. -மனிதர்களே!- செல்வம், வறுமை, ஆரோக்கியம், நோய் போன்ற வேறுபாட்டின் காரணமாக உங்களில் சிலரை சிலருக்கு சோதனையாக ஆக்கியுள்ளோம். நீங்கள் உங்களின் சோதனையில் பொறுமையைக் கடைப்பிடிப்பீர்களா? அல்லாஹ் அதற்காக உங்களுக்குக் கூலி வழங்குவான். பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களையும் கடைப்பிடிக்காதவர்களையும் அவனுக்குக் வழிப்படுபவர்களையும் வழிப்படாதவர்களையும் உம் இறைவன் பார்ப்பவனாக இருக்கின்றான்.