அல்-முக்தஸர்
وَأَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَـٰنِهِمْ لَئِنْ أَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّ ۖ قُل لَّا تُقْسِمُوا۟ ۖ طَاعَةٌ مَّعْرُوفَةٌ ۚ إِنَّ ٱللَّهَ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ ﴿٥٣﴾
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வின் மீது தம்மால் முடிந்தளவு கடும் உறுதியான முறையில் சத்தியமிட்டுக் கூறுகிறார்கள்: “நீங்கள் போருக்காக புறப்படும்படி கட்டளையிட்டால் நிச்சயம் நாங்கள் புறப்படுவோம், என்று.” -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “சத்தியம் செய்யாதீர்கள். உங்களின் பொய்யும், நீங்கள் எண்ணும் கட்டுப்படுதலும் அனைவரும் அறிந்ததுதான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். நீங்கள் எவ்வளவுதான் மறைத்தாலும் நீங்கள் செய்யக்கூடிய எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.