×

النور

வசனம் 32

அல்-முக்தஸர்

وَأَنكِحُوا۟ ٱلْأَيَـٰمَىٰ مِنكُمْ وَٱلصَّـٰلِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَآئِكُمْ ۚ إِن يَكُونُوا۟ فُقَرَآءَ يُغْنِهِمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ ﴿٣٢﴾

நம்பிக்கையாளர்களே!- மனைவியரில்லாத ஆண்களுக்கும் கணவர்கள் இல்லாத சுதந்திரமான பெண்களுக்கும் மணமுடித்து வையுங்கள். உங்கள் அடிமைகளில் நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் மணமுடித்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் அருளால் அவர்களைத் தன்னிறைவானவர்களாக்குவான். அவன் வாழ்வாதாரம் வழங்குவதில் தாராளமானவன்.ஒருவனை தன்னிறைவுள்ளவனாக்குவது அவனிடம் இருக்கும் வாழ்வாதாரத்தைக் குறைத்துவிடாது. தன் அடியார்களின் நிலமைகளைக் குறித்து நன்கறிந்தவன்.