×

النور

வசனம் 29

அல்-முக்தஸர்

لَّيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَدْخُلُوا۟ بُيُوتًا غَيْرَ مَسْكُونَةٍ فِيهَا مَتَـٰعٌ لَّكُمْ ۚ وَٱللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ ﴿٢٩﴾

நூலகங்கள், சந்தையிலுள்ள உணவகங்கள் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள, யாருக்கும் சொந்தமில்லாத பொது இடங்களில் நீங்கள் அனுமதியின்றி நுழைவதில் குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்தும் உங்களின் செயல்களையும், நிலைமைகளையும், நீங்கள் மறைப்பதையும் அல்லாஹ் அறிவான். அதில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.