அல்-முக்தஸர்
ٱلْخَبِيثَـٰتُ لِلْخَبِيثِينَ وَٱلْخَبِيثُونَ لِلْخَبِيثَـٰتِ ۖ وَٱلطَّيِّبَـٰتُ لِلطَّيِّبِينَ وَٱلطَّيِّبُونَ لِلطَّيِّبَـٰتِ ۚ أُو۟لَـٰٓئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَ ۖ لَهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ ﴿٢٦﴾
ஆண்கள், பெண்கள், சொல், செயல் என்பவற்றில் கெட்ட ஒவ்வொன்றும் கெட்ட ஒன்றுக்கே பொருத்தமாகும். அவற்றில் நல்லவை ஒவ்வொன்றும் நல்லவற்றிற்குப் பொருத்தமாகும். தீய ஆண்களும் பெண்களும் கூறுபவற்றை விட்டும் நல்ல ஆண்களும் பெண்களும் பரிசுத்தமானவர்கள். அல்லாஹ்விடமிருந்து அவர்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பும் சுவனம் என்னும் கண்ணியமான வெகுமதியும் அவர்களுக்கு உண்டு.