×

المؤمنون

வசனம் 91

அல்-முக்தஸர்

مَا ٱتَّخَذَ ٱللَّهُ مِن وَلَدٍ وَمَا كَانَ مَعَهُۥ مِنْ إِلَـٰهٍ ۚ إِذًا لَّذَهَبَ كُلُّ إِلَـٰهٍۭ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ ۚ سُبْحَـٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ ﴿٩١﴾

நிராகரிப்பாளர்கள் நினைப்பது போல அல்லாஹ் எந்த மகனையும் ஏற்படுத்தவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய உண்மையான வேறு எந்த ஒன்றும் இல்லை. ஒருவேளை அவனுடன் உண்மையாக வணக்கத்திற்குரிய வேறு கடவுளும் இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளும் தான் படைத்தவற்றைக்கொண்டு தனியே சென்றிருக்கும். ஒன்றையொன்று மிகைத்திருக்கும். அதனால் பிரபஞ்சத்தின் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருக்கும். உண்மையில் இவற்றில் எதுவும் நிகழவில்லை. நிச்சயமாக இது வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன் ஒருவனே அவன் தான் அல்லாஹ் என்பதைக் கூறுகிறது. அவன் இணைவைப்பாளர்கள் கூறும் பிள்ளை, இணை ஆகிய தனக்குப் பொருத்தமற்ற பண்புகளைவிட்டும் தூய்மையாகி விட்டான்.