அல்-முக்தஸர்
وَهُوَ ٱلَّذِىٓ أَنشَأَ لَكُمُ ٱلسَّمْعَ وَٱلْأَبْصَـٰرَ وَٱلْأَفْـِٔدَةَ ۚ قَلِيلًا مَّا تَشْكُرُونَ ﴿٧٨﴾
மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் நிராகரிப்பாளர்களே!- அல்லாஹ்வே நீங்கள் செவியேற்பதற்காக செவியையும் பார்ப்பதற்காக கண்களையும் விளங்கிக்கொள்வதற்காக உள்ளங்களையும் உங்களுக்காக படைத்துள்ளான். இருந்தும் நீங்கள் இந்த அருட்கொடைகளுக்கு மிகக் குறைவாகவே நன்றிசெலுத்துகிறீர்கள்.