×

المؤمنون

வசனம் 24

அல்-முக்தஸர்

فَقَالَ ٱلْمَلَؤُا۟ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَوْمِهِۦ مَا هَـٰذَآ إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ يُرِيدُ أَن يَتَفَضَّلَ عَلَيْكُمْ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَأَنزَلَ مَلَـٰٓئِكَةً مَّا سَمِعْنَا بِهَـٰذَا فِىٓ ءَابَآئِنَا ٱلْأَوَّلِينَ ﴿٢٤﴾

அவருடைய சமூகத்தில் அல்லாஹ்வை நிராகரித்த தலைவர்கள் தங்களைப் பின்பற்றிய பொதுமக்களிடம் கூறினார்கள்: “தன்னைத் தூதர் என்று கூறும் இவர் நிச்சயமாக உங்களைப் போன்ற மனிதர்தான். தலைமைத்துவத்தையும் உங்களை ஆட்சி செய்வதையுமே அவர் விரும்புகின்றார். அல்லாஹ் நம்மிடம் ஒரு தூதரை அனுப்ப நாடியிருந்தால் வானவர்களிலிருந்து தூதரை அனுப்பியிருப்பான். ஒரு மனிதரைத் தூதராக அனுப்ப மாட்டான். நம்முடைய முன்னோர்களிடம் இவர் கூறுவதைப் போன்ற எதனையும் நாங்கள் கேள்விப்பட்டதில்லை.