×

الحج

வசனம் 78

அல்-முக்தஸர்

وَجَـٰهِدُوا۟ فِى ٱللَّهِ حَقَّ جِهَادِهِۦ ۚ هُوَ ٱجْتَبَىٰكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِى ٱلدِّينِ مِنْ حَرَجٍ ۚ مِّلَّةَ أَبِيكُمْ إِبْرَٰهِيمَ ۚ هُوَ سَمَّىٰكُمُ ٱلْمُسْلِمِينَ مِن قَبْلُ وَفِى هَـٰذَا لِيَكُونَ ٱلرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وَتَكُونُوا۟ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِ ۚ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَٱعْتَصِمُوا۟ بِٱللَّهِ هُوَ مَوْلَىٰكُمْ ۖ فَنِعْمَ ٱلْمَوْلَىٰ وَنِعْمَ ٱلنَّصِيرُ ﴿٧٨﴾

அல்லாஹ்வின் பாதையில் அவனுடைய திருப்தியை நாடி ஜிஹாது செய்யுங்கள். அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். உங்களின் மார்க்கத்தை சிரமங்களோ, கடினங்களோ அற்ற இலகுவான மார்க்கமாக ஆக்கியுள்ளான். இந்த இலகுவான மார்க்கமே உங்களின் தந்தை இப்ராஹீமின் மார்க்கமாகும். அல்லாஹ் முந்தைய வேதங்களிலும் குர்ஆனிலும் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டுள்ளான். நிச்சயமாக தூதர் தனக்கு கட்டளையிடப்பட்டதை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டார் என்று தூதர் உங்கள் மீது சாட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நீங்கள் முந்தைய சமூகங்களின் மீது அவர்களின் தூதர்கள் தங்களுக்கு கட்டளையிடப்பட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்துவிட்டார்கள் என்று சாட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான். எனவே நீங்கள் தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றி, அவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்கி, அல்லாஹ்வின் பக்கம் தஞ்சமடைந்து உங்களின் விவகாரங்களில் அவனையே சார்ந்திருங்கள். அவனை நேசிக்கும் நம்பிக்கையாளர்களுக்கு அவனே மிகச் சிறந்த பாதுகாவலனாகவும் தன்னிடம் உதவிதேடக்கூடியவர்களுக்கு மிகச்சிறந்த உதவியாளனாகவும் இருக்கின்றான். எனவே அவனையே பாதுகாவலனாக ஆக்கிக்கொள்ளுங்கள் அவன் உங்களை பாதுகாப்பான். அவனிடமே உதவிதேடுங்கள் அவன் உங்களுக்கு உதவி செய்வான்.