×

الحج

வசனம் 73

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ ضُرِبَ مَثَلٌ فَٱسْتَمِعُوا۟ لَهُۥٓ ۚ إِنَّ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ لَن يَخْلُقُوا۟ ذُبَابًا وَلَوِ ٱجْتَمَعُوا۟ لَهُۥ ۖ وَإِن يَسْلُبْهُمُ ٱلذُّبَابُ شَيْـًٔا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ۚ ضَعُفَ ٱلطَّالِبُ وَٱلْمَطْلُوبُ ﴿٧٣﴾

மனிதர்களே! உங்களுக்கு ஒரு உதாரணம் கூறப்படுகிறது. அதை செவிசாய்த்துக் கேளுங்கள். அதைக்கொண்டு படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கக்கூடிய சிலைகளும் மற்றவைகளும் ஒரு சிறிய ஈயைக்கூட ஒருபோதும் படைக்க முடியாது. அந்த ஈயைப் படைப்பதற்கு அவையனைத்தும் ஒன்றுதிரண்டாலும் அவற்றால் அதனைப் படைக்க முடியாது. அந்த சிலைகளின் மீதிருக்கும் வாசனை திரவியம், அல்லது அது போன்ற ஏதேனும் ஒன்றை ஒரு ஈ பறித்துக் கொண்டாலும் அதனைக்கூட அவற்றால் காப்பாற்றிக் கொள்ள முடியாது. ஈயைப் படைக்கவும் அது எடுத்துச் செல்பவற்றைப் பாதுகாக்கவும் இயலாமல் இருக்கும் போது அதனை விட பெரிய விடயங்களை அவற்றால் செய்ய முடியாது என்பது தெள்ளத் தெளிவு. அல்லாஹ்வை விடுத்து இந்த அளவு இயலாமையில் இருக்கின்ற அவற்றை ஏன் வணங்குகிறீர்கள்? ஈ எடுத்துச் செல்பவற்றைக் காத்துக்கொள்ள முடியாத தேடக்கூடிய வணங்கப்படும் இந்தச் சிலையும் பலவீனமானது. தேடப்படும் இந்த ஈயும் பலவீனமானது.