×

الحج

வசனம் 67

அல்-முக்தஸர்

لِّكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا هُمْ نَاسِكُوهُ ۖ فَلَا يُنَـٰزِعُنَّكَ فِى ٱلْأَمْرِ ۚ وَٱدْعُ إِلَىٰ رَبِّكَ ۖ إِنَّكَ لَعَلَىٰ هُدًى مُّسْتَقِيمٍ ﴿٦٧﴾

ஒவ்வொரு சமூகத்திற்கும் நாம் ஒரு ஷரீஅத்தை (வழிமுறையை) ஏற்படுத்தியுள்ளோம். தங்களின் ஷரீஅத்திற்கேற்ப அவர்கள் செயல்படுவார்கள். -தூதரே!- இணைவைப்பாளர்களும் ஏனைய மதத்தைச் சார்ந்தவர்களும் உமக்கு வழங்கப்பட்ட ஷரீஅத்தைக்குறித்து உம்முடன் முரண்பட வேண்டாம். ஏனெனில் நீர்தான் அவர்களைவிட சத்தியத்தில் முதன்மையானவர். நிச்சயமாக அவர்கள் அசத்தியவாதிகள். அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தனித்துவமாக்குவதன் பக்கம் நீர் மக்களை அழைப்பீராக. நிச்சயமாக நீர் எவ்வித கோணலுமற்ற நேரான வழியில் இருக்கின்றீர்.