×

الحج

வசனம் 65

அல்-முக்தஸர்

أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِى ٱلْأَرْضِ وَٱلْفُلْكَ تَجْرِى فِى ٱلْبَحْرِ بِأَمْرِهِۦ وَيُمْسِكُ ٱلسَّمَآءَ أَن تَقَعَ عَلَى ٱلْأَرْضِ إِلَّا بِإِذْنِهِۦٓ ۗ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٌ رَّحِيمٌ ﴿٦٥﴾

தூதரே!- நிச்சயமாக அல்லாஹ் உமக்கும் மனிதர்களுக்கும் பயன்பாட்டிற்காகவும் தேவைக்காகவும் பூமியிலுள்ள உயிரினங்கள், திண்மங்கள், ஆகியவற்றை வசப்படுத்தித் தந்துள்ளதை நீர் பார்க்கவில்லையா? அவன் கப்பலை உங்களுக்காக வசப்படுத்தித் தந்துள்ளான். அது அவனுடைய கட்டளையால், வசப்படுத்தலால் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கி கடலில் செல்கிறது. வானத்தை அவனுடைய அனுமதியுடன் தவிர பூமியின்மீது விழுந்து விடாமல் தடுத்து வைத்துள்ளான். அவன் அனுமதியளித்திருந்தால் அது பூமியின் மீது விழுந்திருக்கும். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின் மீது மிகுந்த பரிவுடையவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான். அவர்கள் அநீதி இழைத்தபோதிலும் அவர்களுக்கு அவன் இவற்றையெல்லாம் வசப்படுத்தித் தந்துள்ளான்.