அல்-முக்தஸர்
لِّيَجْعَلَ مَا يُلْقِى ٱلشَّيْطَـٰنُ فِتْنَةً لِّلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ وَٱلْقَاسِيَةِ قُلُوبُهُمْ ۗ وَإِنَّ ٱلظَّـٰلِمِينَ لَفِى شِقَاقٍۭ بَعِيدٍ ﴿٥٣﴾
அல்லாஹ் நயவஞ்சகர்களுக்கும், இறுகிப்போன இதயம்கொண்ட இணைவைப்பாளர்களுக்கும் சோதனையாக மாற்றவே தூதர் ஓதும்போது ஷைத்தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறான். நிச்சயமாக நயவஞ்சகர்களிலும் இணைவைப்பாளர்களிலுமுள்ள அநியாயக்காரர்கள் அல்லாஹ், அவனுடைய தூதர் மீது விரோதத்தில் உள்ளார்கள். சத்தியம் மற்றும் நேர்வழியை விட்டும் தூரத்தில் உள்ளார்கள்.