×

الحج

வசனம் 18

அல்-முக்தஸர்

أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ يَسْجُدُ لَهُۥ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَن فِى ٱلْأَرْضِ وَٱلشَّمْسُ وَٱلْقَمَرُ وَٱلنُّجُومُ وَٱلْجِبَالُ وَٱلشَّجَرُ وَٱلدَّوَآبُّ وَكَثِيرٌ مِّنَ ٱلنَّاسِ ۖ وَكَثِيرٌ حَقَّ عَلَيْهِ ٱلْعَذَابُ ۗ وَمَن يُهِنِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن مُّكْرِمٍ ۚ إِنَّ ٱللَّهَ يَفْعَلُ مَا يَشَآءُ ۩ ﴿١٨﴾

தூதரே!- நிச்சயமாக வானங்களிலுள்ள வானவர்களும் பூமியிலுள்ள நம்பிக்கைகொண்ட மனித, ஜின் இனத்தாரும் அல்லாஹ்வை வழிப்படுவதற்காக சிரம்பணிகின்றார்கள். மேலும் சூரியனும், சந்திரனும், வானிலுள்ள நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பூமியிலுள்ள உயிரினங்களும் அவனுக்குக் கட்டுப்பட்டு சிரம்பணிகின்றன. இன்னும் ஏராளமான மக்களும் அவனுக்கு வணக்கமாகச் சிரம்பணிகிறார்கள் என்பதை நீர் அறியவில்லையா? அதிகமானோர் அவனுக்கு வணக்கமாகச் சிரம்பணிவதற்கு மறுக்கின்றனர். அவர்களின் நிராகரிப்பினால் அவர்கள் மீது அல்லாஹ்வின் வேதனை உறுதியாகி விட்டது. யாருக்கு அல்லாஹ் அவருடைய நிராகரிப்பின் காரணமாக இழிவை விதித்துவிட்டானோ அவரை யாராலும் கண்ணியப்படுத்த முடியாது. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான். அவனை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது.