×

الأنبياء

வசனம் 90

அல்-முக்தஸர்

فَٱسْتَجَبْنَا لَهُۥ وَوَهَبْنَا لَهُۥ يَحْيَىٰ وَأَصْلَحْنَا لَهُۥ زَوْجَهُۥٓ ۚ إِنَّهُمْ كَانُوا۟ يُسَـٰرِعُونَ فِى ٱلْخَيْرَٰتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا ۖ وَكَانُوا۟ لَنَا خَـٰشِعِينَ ﴿٩٠﴾

நாம் அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித்து அவருக்கு யஹ்யா என்னும் மகனை வழங்கினோம். அவருடைய மனைவியையும் சரிப்படுத்தினோம். குழந்தைப்பேறு அற்ற அவருடைய மனைவி அதிகம் குழந்தைகள் பெறக்கூடியவளாக ஆகிவிட்டாள். நிச்சயமாக ஸகரிய்யா, அவருடைய மனைவி, மகன் அனைவரும் நற்செயல்களின்பால் விரையக்கூடியவர்களாக, நம்மிடம் கூலியை எதிர்பார்த்தும், நம்மிடம் உள்ள தண்டனையை அஞ்சியும் நம்மை அழைப்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் நமக்குப் பணிந்து நடக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.