×
الأنبياءவசனம் 87

அல்-முக்தஸர்

وَذَا ٱلنُّونِ إِذ ذَّهَبَ مُغَـٰضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِى ٱلظُّلُمَـٰتِ أَن لَّآ إِلَـٰهَ إِلَّآ أَنتَ سُبْحَـٰنَكَ إِنِّى كُنتُ مِنَ ٱلظَّـٰلِمِينَ ﴿٨٧﴾

தூதரே!- மீனுடையவரான யூனுஸையும் நினைவு கூர்வீராக. அவர் தம் இறைவனிடம் அனுமதி பெறாமல் தம் சமூகம் பாவத்தில் பிடிவாதமாக இருந்ததனால் அவர்கள் மீது கோபம்கொண்டு சென்றுவிட்டார். அவர் சென்றுவிட்டதற்காக நாம் அவரைத் தண்டித்து அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தமாட்டோம் என்று நிச்சயமாக அவர் எண்ணிக் கொண்டார். மீன் அவரை விழுங்கிய போது கடும் நெருக்கடியாலும், சிறையாலும் அவர் சோதிக்கப்பட்டார். அவர் தம் பாவத்தை ஒத்துக்கொண்டவராக, மன்னிப்புக்கோரி, மீனின் வயிறு, கடல், இரவு ஆகிய இருள்களில் இருந்தவாறு பிரார்த்தனை செய்தார். அவர் கூறினார்: “உன்னைத் தவிர உண்மையாக வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்.”