×
الأنبياءவசனம் 83

அல்-முக்தஸர்

وَأَيُّوبَ إِذْ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّى مَسَّنِىَ ٱلضُّرُّ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ ﴿٨٣﴾

தூதரே!- அய்யூபின் சம்பவத்தையும் நினைவு கூர்வீராக. துன்பம் அவரைத் தாக்கியபோது அவர் தம் இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! நான் நோயால் பாதிக்கப்பட்டு என் குடும்பத்தையும் இழந்து விட்டேன். நீ அனைவருக்கும் மிகச் சிறந்த கருணையாளனாக இருக்கின்றாய். எனவே எனக்கு ஏற்பட்ட துன்பத்தை என்னை விட்டும் திருப்பி விடுவாயாக.”