×

الأنبياء

வசனம் 51

அல்-முக்தஸர்

وَلَقَدْ ءَاتَيْنَآ إِبْرَٰهِيمَ رُشْدَهُۥ مِن قَبْلُ وَكُنَّا بِهِۦ عَـٰلِمِينَ ﴿٥١﴾

நாம் இப்ராஹீமுக்கு சிறு வயதிலேயே அவருடைய சமூகத்திற்கு எதிராக ஆதாரத்தை வழங்கினோம். நாம் அவரைக்குறித்து நன்கறிந்தவர்களாக இருந்தோம். எனவேதான் நமது அறிவின் பிரகாரம் அவரது சமூகத்துக்கு எதிராக அவருக்குத் தகுதியான சான்றை வழங்கினோம்.