×
الأنبياءவசனம் 5

அல்-முக்தஸர்

بَلْ قَالُوٓا۟ أَضْغَـٰثُ أَحْلَـٰمٍۭ بَلِ ٱفْتَرَىٰهُ بَلْ هُوَ شَاعِرٌ فَلْيَأْتِنَا بِـَٔايَةٍ كَمَآ أُرْسِلَ ٱلْأَوَّلُونَ ﴿٥﴾

மாறாக முஹம்மது கொண்டுவந்ததைக் குறித்து அவர்கள் தடுமாற்றத்தில் இருந்தார்கள். சில சமயங்களில் கூறினார்கள்: “இவை குழப்பமான கனவுகள். இவற்றிற்கு எந்த விளக்கமும் கூறமுடியாது, என்று.” சில சமயங்களில் கூறினார்கள்: “இல்லை, இதற்கு ஒரு அடிப்படையே இல்லாமல் இதனைப் புனைந்து கூறியுள்ளார், என்று.” சில சமயங்களில் கூறினார்கள்: “இவர் ஒரு கவிஞர், என்று. அவர் தம் வாதத்தில் உண்மையாளராக இருந்தால் முந்தைய தூதர்கள் கொண்டு வந்ததைப்போல ஒரு அற்புதத்தைக் கொண்டு வரட்டும். முந்தைய தூதர்கள் அற்புதங்களைக் கொண்டுவந்தார்கள். உதாரணமாக மூஸாவின் கைத்தடி, ஸாலிஹின் பெண் ஒட்டகம்.