அல்-முக்தஸர்
بَلْ مَتَّعْنَا هَـٰٓؤُلَآءِ وَءَابَآءَهُمْ حَتَّىٰ طَالَ عَلَيْهِمُ ٱلْعُمُرُ ۗ أَفَلَا يَرَوْنَ أَنَّا نَأْتِى ٱلْأَرْضَ نَنقُصُهَا مِنْ أَطْرَافِهَآ ۚ أَفَهُمُ ٱلْغَـٰلِبُونَ ﴿٤٤﴾
மாறாக இந்த நிராகரிப்பாளர்களையும் அவர்களின் முன்னோர்களையும் விட்டுப்பிடிக்கும் பொருட்டு நாம் அருட்கொடைகளை அள்ளி வழங்கி நீண்ட காலம் வரைக்கும் அனுபவிக்கச் செய்தோம். அதன் மூலம் அவர்கள் ஏமாந்து, தங்களின் நிராகரிப்பில் நிலைத்துவிட்டார்கள். நம் அருட்கொடைகளைக்கொண்டு ஏமாந்து நம் வேதனையை விரைவாக வேண்டும் இவர்கள், நிச்சயமாக நாம் பூமியை அதன் சுற்றுப்புறத்திலிருந்து, அதிலுள்ளவர்களை அடக்கி, வென்று, குறைத்துக் கொண்டே வருகின்றோம் என்பதைக் கவனித்து, மற்றவர்களுக்கு ஏற்பட்டது இவர்களுக்கும் ஏற்படாமலிருக்க, படிப்பினை பெறமாட்டாரகளா? இவர்கள் ஒருபோதும் மிகைப்பவர்களல்ல. மாறாக அவர்கள் மிகைக்கப்படுபவர்களே.