அல்-முக்தஸர்
وَمَن يَقُلْ مِنْهُمْ إِنِّىٓ إِلَـٰهٌ مِّن دُونِهِۦ فَذَٰلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ ۚ كَذَٰلِكَ نَجْزِى ٱلظَّـٰلِمِينَ ﴿٢٩﴾
வானவர்களில் யாரேனும், “அல்லாஹ்வை விடுத்து நான்தான் இறைவனாவேன்” என்று கூறியதாக வைத்துக்கொண்டால் நிச்சயமாக நாம் அதற்குத் தண்டனையாக மறுமை நாளில் நிரந்தரமான நரக வேதனையை அளிப்போம். இவ்வாறே நாம் அல்லாஹ்வை நிராகரித்து இணைவைக்கும் அநியாயக்காரர்களுக்கு தண்டனை வழங்குகிறோம்.