அல்-முக்தஸர்
قَالَ فَٱذْهَبْ فَإِنَّ لَكَ فِى ٱلْحَيَوٰةِ أَن تَقُولَ لَا مِسَاسَ ۖ وَإِنَّ لَكَ مَوْعِدًا لَّن تُخْلَفَهُۥ ۖ وَٱنظُرْ إِلَىٰٓ إِلَـٰهِكَ ٱلَّذِى ظَلْتَ عَلَيْهِ عَاكِفًا ۖ لَّنُحَرِّقَنَّهُۥ ثُمَّ لَنَنسِفَنَّهُۥ فِى ٱلْيَمِّ نَسْفًا ﴿٩٧﴾
மூஸா சாமிரியிடம் கூறினார்: “நீ சென்றுவிடு. இனி உயிருடன் இருக்கும்வரை “நிச்சயமாக நான் தீண்டவும் மாட்டேன். தீண்டப்படவும் மாட்டேன்” என்றுதான் கூற வேண்டும். நீ ஒதுக்கப்பட்டவனாகத்தான் வாழ்வாய். உனக்கு மறுமை நாளில் ஒருகுறிப்பிட்ட நேரம் உண்டு. அங்கு நீ விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவாய். அல்லாஹ் ஒருபோதும் இந்த வாக்குறுதிக்கு மாறுசெய்ய மாட்டான். உனது கடவுளாக நீ ஆக்கி, அல்லாஹ்வை விடுத்து எதனை வணங்கினாயோ அந்த காளைக் கன்றைப் பார். நாம் அது உருகும் வரை நெருப்பால் எரித்து அதன் எந்த அடையாளமும் எஞ்சியிருக்காதவாறு கடலில் வீசி விடுவோம்.