×

طه

வசனம் 90

அல்-முக்தஸர்

وَلَقَدْ قَالَ لَهُمْ هَـٰرُونُ مِن قَبْلُ يَـٰقَوْمِ إِنَّمَا فُتِنتُم بِهِۦ ۖ وَإِنَّ رَبَّكُمُ ٱلرَّحْمَـٰنُ فَٱتَّبِعُونِى وَأَطِيعُوٓا۟ أَمْرِى ﴿٩٠﴾

மூஸா திரும்பி வருவதற்கு முன்னால் ஹாரூன் அவர்களிடம் கூறினார்: “ஆபரணங்களிலிருந்து காளைக் கன்று உருவாக்கப்பட்டதும் அது எழுப்பும் சப்தமும் உங்களில் நம்பிக்கையாளர்கள் யார்? நிராகரிப்பாளர்கள் யார்? என்று சோதிப்பதற்காகவே அன்றி வேறில்லை. -என் சமூகமே!- நிச்சயமாக கருணைக்குச் சொந்தக்காரனே உங்களின் இறைவனாவான். உங்களுக்கு கருணை காட்டுவதற்கு முன் உங்களுக்கு எவ்வித தீங்கிழைக்கவோ நன்மை பயக்கவோ கூட ஆற்றலற்றவனல்ல உங்கள் இறைவன். எனவே அவனை மட்டுமே வணங்குவதில் என்னைப் பின்பற்றுங்கள். அவனைத் தவிர மற்றவற்றை வணங்குவதை விட்டுவிட்டு எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்.”