×

طه

வசனம் 86

அல்-முக்தஸர்

فَرَجَعَ مُوسَىٰٓ إِلَىٰ قَوْمِهِۦ غَضْبَـٰنَ أَسِفًا ۚ قَالَ يَـٰقَوْمِ أَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا ۚ أَفَطَالَ عَلَيْكُمُ ٱلْعَهْدُ أَمْ أَرَدتُّمْ أَن يَحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِّن رَّبِّكُمْ فَأَخْلَفْتُم مَّوْعِدِى ﴿٨٦﴾

தம் சமூகம் காளைக்கன்றை வணங்கியதனால் அவர்கள் மீது கவலைகொண்டு மூஸா கோபமாக அவர்களிடம் திரும்பிச் சென்றார். அவர் அவர்களைப் பார்த்துக் கேட்டார்: “என் சமூகமே! அல்லாஹ் உங்களுக்குத் தவ்ராத்தை இறக்கி, சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வேன் என்று உங்களுக்கு அழகிய வாக்குறுதி அளிக்கவில்லையா? நீங்கள் மறந்துவிடுமளவுக்கு உங்கள் மீது காலம் நீண்டுவிட்டதா என்ன? அல்லது உங்களின் இந்த செயலின் மூலம் இறைவனின் கோபம் ஏற்பட்டு அவனது வேதனை உங்கள் மீது இறங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? நான் உங்களின் பக்கம் திரும்பி வரும் வரைக்கும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து உறுதியாக இருப்போம் என்று எனக்கு அளித்த வாக்குறுதிக்கு அதனால்தான் மாறுசெய்துவிட்டீர்களா?