×

طه

வசனம் 78

அல்-முக்தஸர்

فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ بِجُنُودِهِۦ فَغَشِيَهُم مِّنَ ٱلْيَمِّ مَا غَشِيَهُمْ ﴿٧٨﴾

ஃபிர்அவ்ன் தன் படைகளுடன் அவர்களைப் பின்தொடர்ந்தான். கடலிலிருந்து மூட வேண்டிய ஏதோ ஒன்று- அதன் உண்மை நிலையை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள்- அவனது படையை மூடிவிட்டது. அவர்கள் அனைவரும் மூழ்கி அழிந்தார்கள். மூஸாவும் அவருடன் இருந்தவர்களும் தப்பித்தார்கள்.