×

طه

வசனம் 70

அல்-முக்தஸர்

فَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سُجَّدًا قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ هَـٰرُونَ وَمُوسَىٰ ﴿٧٠﴾

மூஸா தம் கைத்தடியை எறிந்தார். அது பாம்பாக மாறி அவர்கள் உருவாக்கிய சூனியங்கள் அனைத்தையும் விழுங்கிவிட்டது. நிச்சயமாக மூஸா கொண்டு வந்தது சூனியமல்ல, நிச்சயமாக அது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளதுதான் என்பதை அறிந்துகொண்ட சூனியக்காரர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்தார்கள். அவர்கள் கூறினார்கள்: “நாங்கள், படைப்புகள் அனைத்திற்கும் இறைவனாவனான, மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனின் மீது நம்பிக்கைகொண்டோம்.”