அல்-முக்தஸர்
قَالَ لَهُم مُّوسَىٰ وَيْلَكُمْ لَا تَفْتَرُوا۟ عَلَى ٱللَّهِ كَذِبًا فَيُسْحِتَكُم بِعَذَابٍ ۖ وَقَدْ خَابَ مَنِ ٱفْتَرَىٰ ﴿٦١﴾
மூஸா ஃபிர்அவ்னின் சூனியக்காரர்களுக்கு அறிவுரை வழங்கியவராகக் கூறினார்: “எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் மக்களை ஏமாற்றும் சூனியத்தைக்கொண்டு அல்லாஹ்வின்மீது பொய்யாக இட்டுக்கட்டாதீர்கள். அவன் தன் வேதனையால் உங்கள் அனைவரையும் அழித்துவிடுவான். அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டியவர்கள் நஷ்டமடைந்துவிட்டார்கள்.