×

طه

வசனம் 111

அல்-முக்தஸர்

وَعَنَتِ ٱلْوُجُوهُ لِلْحَىِّ ٱلْقَيُّومِ ۖ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا ﴿١١١﴾

அடியார்களின் முகங்கள் தாழ்ந்துவிடும். என்றும் மரணிக்காத நிலையானவனுக்காக அவைகள் பணிந்துவிடும். அவன் அடியார்களின் அனைத்து விவகாரங்களையும் நிர்வகித்து நடைமுறைப்படுத்துபவன். தம்மைத் தாமே அழிவில் ஆழ்த்தி, பாவங்களைச் சுமந்தோர் நஷ்டமடைந்துவிட்டார்கள்.