×

البقرة

வசனம் 93

அல்-முக்தஸர்

وَإِذْ أَخَذْنَا مِيثَـٰقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ ٱلطُّورَ خُذُوا۟ مَآ ءَاتَيْنَـٰكُم بِقُوَّةٍ وَٱسْمَعُوا۟ ۖ قَالُوا۟ سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا۟ فِى قُلُوبِهِمُ ٱلْعِجْلَ بِكُفْرِهِمْ ۚ قُلْ بِئْسَمَا يَأْمُرُكُم بِهِۦٓ إِيمَـٰنُكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ ﴿٩٣﴾

மூசாவைப் பின்பற்ற வேண்டும், அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் உங்களிடம் உறுதிமொழி வாங்கிய சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள். உங்களை அச்சமூட்டுவதற்காக உங்களுக்கு மேலே மலையை உயர்த்தினோம். நாம் கூறினோம், நாம் உங்களுக்கு வழங்கிய தவ்ராத்தை முழு ஈடுபாட்டோடு பற்றிக் கொள்ளுங்கள். கட்டுப்பட்டவாறு செவிசாயுங்கள். அவ்வாறு இல்லையெனில் நாம் உங்களின் மீது மலையை விழச்செய்துவிடுவோம்.எங்கள் செவிகளால் கேட்டு செயல்களால் மாறுசெய்தோம் என்று கூறினீர்கள். அவர்களின் நிராகரிப்பினால் காளைக்கன்று வழிபாடு அவர்களின் உள்ளங்களில் நிலைகொண்டுவிட்டது. தூதரே! நீர் கூறும், நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இந்த ஈமான் உங்களுக்குக் கட்டளையிடும் நிராகரிப்பு மோசமானது! ஏனெனில் உண்மையான ஈமானுடன் நிராகரிப்பு ஒருபோதும் கலந்திருக்காது.