×

البقرة

வசனம் 90

அல்-முக்தஸர்

بِئْسَمَا ٱشْتَرَوْا۟ بِهِۦٓ أَنفُسَهُمْ أَن يَكْفُرُوا۟ بِمَآ أَنزَلَ ٱللَّهُ بَغْيًا أَن يُنَزِّلَ ٱللَّهُ مِن فَضْلِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۖ فَبَآءُو بِغَضَبٍ عَلَىٰ غَضَبٍ ۚ وَلِلْكَـٰفِرِينَ عَذَابٌ مُّهِينٌ ﴿٩٠﴾

அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொள்வதற்குப் பதிலாக அவர்கள் பெற்றுக்கொண்டது மோசமானது!. நபித்துவமும், குர்ஆனும் முஹம்மதுக்கு வழங்கப்பட்டது என்ற பொறாமையினாலும், அநியாயமாகவும் அல்லாஹ் இறக்கியவற்றையும், அவனது தூதர்களையும் நிராகரித்தார்கள். முஹம்மதை அவர்கள் நிராகரித்ததனாலும் அதற்கு முன் தவ்ராத்தை திரித்ததனாலும் அல்லாஹ்வின் இரட்டிப்பான கோபத்திற்கு உரியவர்களாகிவிட்டார்கள். முஹம்மதுடைய தூதுத்துவத்தை நிராகரிப்பவர்களுக்கு மறுமைநாளில் இழிவுதரும் வேதனை உண்டு.