×

البقرة

வசனம் 87

அல்-முக்தஸர்

وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَـٰبَ وَقَفَّيْنَا مِنۢ بَعْدِهِۦ بِٱلرُّسُلِ ۖ وَءَاتَيْنَا عِيسَى ٱبْنَ مَرْيَمَ ٱلْبَيِّنَـٰتِ وَأَيَّدْنَـٰهُ بِرُوحِ ٱلْقُدُسِ ۗ أَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُولٌۢ بِمَا لَا تَهْوَىٰٓ أَنفُسُكُمُ ٱسْتَكْبَرْتُمْ فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ ﴿٨٧﴾

நாம் மூஸாவுக்கு தவ்ராத்தை வழங்கினோம். அவருக்குப் பின்னால் பல தூதர்களை தொடர்ந்து வரச்செய்தோம். ஈசாவுக்கு, அவருடைய நம்பகத்தன்மையைத் தெளிவுபடுத்தக்கூடிய தெளிவான சான்றுகளை வழங்கினோம். அவர் இறந்தவர்களை உயிர்ப்பித்தார்; பிறவிக்குருடர்களையும், தொழுநோயாளிகளையும் குணப்படுத்தினார். ஜிப்ரீல் என்னும் வானவர் மூலமாக அவரை பலப்படுத்தினோம். இஸ்ராயீலின் மக்களே! உங்கள் மனம் விரும்பாததை தூதர்கள் கொண்டுவந்த போதெல்லாம் சத்தியத்தையும் அல்லாஹ்வின் தூதர்களையும் எதிர்த்து ஆணவம் கொள்கிறீர்களா? அவர்களில் ஒருபிரிவினரை நிராகரித்து விட்டீர்கள்; ஒரு பிரிவினரை கொன்று விட்டீர்கள்?!