×

البقرة

வசனம் 7

அல்-முக்தஸர்

خَتَمَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ ۖ وَعَلَىٰٓ أَبْصَـٰرِهِمْ غِشَـٰوَةٌ ۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ ﴿٧﴾

ஏனெனில் அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டு அதிலிருக்கும் அசத்தியத்தோடு அதனைப் பூட்டிவிட்டான். அவர்களுடைய செவிகளின் மீதும் முத்திரையிட்டுவிட்டான். எனவே, அவர்களால் சத்தியத்தைச் செவியுற்று அதற்குக் கீழ்ப்படிய முடியாது. அவர்களுடைய பார்வைகளின் மீதும் திரையைப் போட்டுவிட்டான். ஆகவே, சத்தியம் தெளிவாக இருந்தும் அதனை அவர்களால் காணமுடியாது. மறுமையில் அவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.