அல்-முக்தஸர்
وَءَامِنُوا۟ بِمَآ أَنزَلْتُ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ وَلَا تَكُونُوٓا۟ أَوَّلَ كَافِرٍۭ بِهِۦ ۖ وَلَا تَشْتَرُوا۟ بِـَٔايَـٰتِى ثَمَنًا قَلِيلًا وَإِيَّـٰىَ فَٱتَّقُونِ ﴿٤١﴾
முஹம்மது மீது நான் இறக்கிய குர்ஆனின்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அது தவ்ராத் திரிக்கப்படுவதற்கு முன்னர் அதிலிருந்த அல்லாஹ்வின் ஏகத்துவம் மற்றும் முஹம்மதின் தூதுத்துவம் குறித்து கூறப்பட்ட விஷயங்களை உண்மைப்படுத்துகிறது. அதனை நிராகரிக்கும் முதல் கூட்டமாக நீங்கள் ஆகிவிடாதீர்கள். நான் இறக்கிய வசனங்களை பதவி, பட்டம் போன்ற அற்ப ஆதாயத்திற்காக விற்றுவிடாதீர்கள். என் கோபத்தையும், தண்டனையையும் அஞ்சிக் கொள்ளுங்கள்.