×

البقرة

வசனம் 36

அல்-முக்தஸர்

فَأَزَلَّهُمَا ٱلشَّيْطَـٰنُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ ۖ وَقُلْنَا ٱهْبِطُوا۟ بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۖ وَلَكُمْ فِى ٱلْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَـٰعٌ إِلَىٰ حِينٍ ﴿٣٦﴾

ஷைத்தான் அவ்விருவருக்கும் தொடர்ந்து ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, தடைசெய்யப்பட்ட அந்த விஷயத்தை அலங்கரித்துக் காட்டினான். எந்த அளவுக்கெனில், அல்லாஹ் அவர்களுக்குத் தடைசெய்த மரத்திலிருந்து உண்டு பாவத்தில் வீழ்ந்துவிட்டார்கள். அதற்குத் தண்டனையாக அவ்விருவரும் இருந்த சொர்க்கத்திலிருந்து அல்லாஹ் அவர்களை வெளியேற்றினான். அப்போது அவர்களிடமும் ஷைத்தானிடமும் பின்வருமாறு கூறினான்: பூமியில் இறங்கிவிடுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருப்பீர்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு முடிந்து மறுமை நிகழ முன் பூமியில் உங்களுக்குத் தங்குமிடமும் வாழ்க்கையும் உண்டு. அதிலுள்ள வளங்களை அனுபவித்துக்கொள்ளவும் முடியும்.