×

البقرة

வசனம் 30

அல்-முக்தஸர்

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَـٰٓئِكَةِ إِنِّى جَاعِلٌ فِى ٱلْأَرْضِ خَلِيفَةً ۖ قَالُوٓا۟ أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ ٱلدِّمَآءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۖ قَالَ إِنِّىٓ أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ ﴿٣٠﴾

வானவர்களிடம் பின்வருமாறு உரையாடியதை அல்லாஹ் அறிவிக்கிறான்: நான் பூமியில் மனிதர்களை ஏற்படுத்தப் போகின்றேன். அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து பூமியை வாளப்படுத்துவதற்கு அவர்கள் தங்களுக்குள் தொன்றுதொட்டு உருவாகும் தலைமுறைகளாக இருப்பார்கள்.வானவர்கள் தங்கள் இறைவனிடம், பூமியில் ஆதமுடைய மக்களை வழித்தோன்றல்களாக ஆக்குவதின் காரணம் என்ன? அவர்கள் பூமியில் குழப்பம் விளைவித்து அநியாயமாக இரத்தம் சிந்துவார்களே? என்று அறியாதவர்களாக, தெளிவடைய வேண்டி கேட்ட அவர்கள், நாங்கள் உனக்குக் கீழ்ப்படிகின்றோம்; உனது தூய்மையைப் பறைசாற்றி உன்னைப் போற்றிப் புகழ்கின்றோம். இதில் நாங்கள் ஒருபோதும் சோர்வடைய மாட்டோம்; உனது கண்ணியத்தையும், பரிபூரணத்தையும் ஏற்றுக் கொள்கின்றோம் என்றும் கூறினார்கள். அதற்கு அல்லாஹ், அவர்களைப் படைப்பதன், வழித்தோன்றல்களாக ஆக்குவதன் நோக்கங்கள் குறித்து நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று கூறினான்.