அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَذَرُوا۟ مَا بَقِىَ مِنَ ٱلرِّبَوٰٓا۟ إِن كُنتُم مُّؤْمِنِينَ ﴿٢٧٨﴾
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வின்மீதும் அவன் வட்டியைத் தடைசெய்திருப்பதையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் மக்களிடம் எஞ்சியுள்ள உங்களது வட்டிப்பணத்தை எடுக்காது விட்டுவிடுங்கள்.