அல்-முக்தஸர்
يَمْحَقُ ٱللَّهُ ٱلرِّبَوٰا۟ وَيُرْبِى ٱلصَّدَقَـٰتِ ۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ ﴿٢٧٦﴾
வட்டியின் மூலம் உருவான செல்வத்தை அல்லாஹ் அழிக்கிறான். அழித்தல் என்பது வெளிரங்கமான பொருட்சேதத்தைக் கொண்டோ மறைமுகமான பரக்கத்தை நீக்குவது கொண்டோ ஏற்படலாம். தர்மங்களுக்கு பலமடங்கு நன்மைகளை அளிக்கிறான். அவற்றை பத்துமடங்கிலிருந்து எழுநூறு மடங்குவரை அவன் அதிகரிக்கச் செய்கிறான். தர்மம் சய்வோரின் சொத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துகிறான். அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடிய, அவன் தடைசெய்ததை அனுமதிக்கப்பட்டதாகக் கருதக்கூடிய, பாவங்களில் உழலக்கூடிய பிடிவாதக்காரனை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.